சர்ச்சைக்குள்ளாகியுள்ள குருநாகல் அரச மண்டபத்தை இடித்ததில் எந்தத் தவறுமில்லையெனவும் அது புராதன கட்டிடமில்லையெனவும் தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
மன்னன் புவனேகபாகுவின் அரச மண்டபம் என நம்பப்பட்டு வந்த குறித்த கட்டிடம் குருநாகல் மேயரின் உத்தரவில் இடிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மன்னனுக்கு முஸ்லிம் மனைவியொருவர் இருந்ததாக அண்மையில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இதேவேளை, குறித்த கட்டிடம் மன்னனால் கட்டப்படவில்லையெனவும் 1800 களில் புவனேகபாகு என பெயர் கொண்ட ஒரு தனி நபரின் பெயரில் பதியப்பட்டுள்ளதாகவும் தற்போது பெரமுன தரப்பினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment