எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து தான் விலகிக் கொள்ளப் போவதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அடுத்த தலைமுறை தலைவர் ஒருவரிடம் கட்சியைக் கையளித்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் தாம் இம்முடிவை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிதறுண்டு விட்டதாக தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment