2011 உலக கிண்ண கிரிக்கட் இறுதியாட்டத்தை பணம் பெற்று விட்டு இலங்கை விட்டுக் கொடுத்து விட்டதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்த குற்றச்சாட்டின் பின்னணியில் விசாரணை இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், நாளைய தினம் முன்னாள் தேசிய அணியின் தலைவர் குமார சங்கக்கார விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆட்ட நிர்ணய சதியில் வீரர்களுக்கு தொடர்பில்லையென மஹிந்தானந்த தெரிவித்திருந்த நிலையில் அப்போதைய தெரிவாளர் அரவிந்தவிடமும் 6 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment