தன்னைக் கைது செய்வதற்கான முயற்சிகளைத் தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.
தன்னை அடிக்கடி விசாரணைக்கு அழைப்பதால் பிரச்சார நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இதனூடாக தனது 'நற்பெயருக்கு' களங்கம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோரூடாக இவ்வழக்கு த்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ரிசாத் தரப்பு தெரிவிக்கும் அதேவேளை, ஈஸ்டர் தாக்குதலோடு ரிசாத் பதியுதீனை தொடர்பு படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment