உடல் நலக்குறைவால் அதிகம் நடக்க முடியாமல் இருக்கும் நிலையில் தனது தந்தை மஹிந்த ராஜபக்சவுக்கு பதிலாக, நேற்றைய தினம் குருநாகல் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் மேடையேறியுள்ளார் மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச.
எனினும், எதிர்காலத்தில் தன்னை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்க வேண்டாம் என தந்தையிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்த ரோஹித்த, குருநாகலில் தேர்தல் கேட்டுவிட்டு மஹிந்த ராஜபக்ச அங்கு வராமல் போய்விடுவார் என்ற அச்சத்துக்கு விளக்கமளித்துள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு குருநாகலில் பிரதமரின் தொடர்பாடல் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளதாக தெரிவித்த ரோஹித்த அதனூடாக மஹிந்த இல்லாத குறை தீர்க்கப்படும் என தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment