வெளிநாடுகளிலிருந்து அழைத்து வருதல் இடை நிறுத்தம் - sonakar.com

Post Top Ad

Monday, 13 July 2020

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வருதல் இடை நிறுத்தம்


வெளிநாடுகளில் கொரோனா சூழ்நிலையில் முடங்கியிருந்த இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வரும் பணி நாளை முதல் தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் பரவியதன் பின்னணியில் தற்சமயம் நாட்டில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே புதிதாக வெளிநாடுகளிலிருந்து அழைத்து வருவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினமும் வெளிநாட்டிலிருந்து திரும்பியோர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment