போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பேன்: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Saturday, 11 July 2020

போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிப்பேன்: மஹிந்த!


தாம் அரசமைத்ததும் இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தை ஒழிக்கப் போவதாக தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

2009 யுத்த நிறைவின் பின்னரே இலங்கை ஆசியாவின் முக்கிய போதைப் பொருள் கேந்திர மையமாக மாறியுள்ளதாக ஹர்ஷ டி சில்வா தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்ததுடன் தமது அரசில் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடந்த ஆட்சியில் தெரிவித்திருந்தார். அதே போன்று கூட்டாட்சி ஆரம்பத்தில் இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகத்தின் 65 வீதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கருதப்பட்ட வெலே சுதாவும் கைது செய்யப்பட்டதோடு பெருந்தொகை போதைப் பொருள் பகிரங்கமாக அழிக்கவும் பட்டது.

எனினும், கடந்த ஆட்சியிலேயே போதைப் பொருள் வர்த்தகம் இலங்கையில் வேரூன்றியிருப்பதாகவும் தாம் ஆட்சிக்கு வந்ததும் அதனை அழிக்கப் போவதாகவும் மஹிந்த ராஜபக்ச, ஹொரனயில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment