நாட்டின் கொரோனா சூழ்நிலை அபாய நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் மேலும் பாரிய இழப்புகள் ஏற்பட முன்னர் தேர்தலை பின் போடுவதாயின் பின் போட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக மட்டத்திலான பரிசோதனைகளை நடாத்தும் படி மார்ச் மாதமே வலியுறுத்திய போதும் அரசு அதற்கு செவிமடுக்காததன் விளைவே தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கும் அவர் இன்னும் மக்கள் பணத்தை வீணடித்து இறுதி நேரத்தில் பின் போடாது, இப்போதே அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் இருந்த தொற்றாளர் எண்ணிக்கையை தற்போதுள்ள எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இலங்கையின் சூழ்நிலையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment