சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளித்து டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கமும் கொரோனா பணிகளிலிருந்து நீங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனை, கிருமி நாசினி தெளிப்பு, தனிமைப்படுத்தல் மைய நடவடிக்கைகளில் உதவி வந்த குறித்த ஊழியர்களுக்கு மாதாந்தம் 22,000 ரூபா கொடுப்பனவே வழங்கப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்ட ரீதியான பாதுகாப்பு எதுவுமின்றி தமது பணிகளைத் தொடர முடியாது என சுகாதார பரிசோதகர்கள் விலகிக் கொண்டுள்ள நிலையில் தற்போது டெங்கு தடுப்பு உதவியாளர்களும் இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment