கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலங்களை கட்டாயமாக எரிப்பதற்கு அரசு எடுத்த முடிவுக்கு எதிரான அடிப்படை வழக்கு மீறல் வழக்குகளின் விசாரணை செப்ட 9ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 9 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் ஒன்றைத் தவிர ஏனைய வழக்குகள் இன்று பரிசீலிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு செப். 9ம் திகதி தேதி வழங்கப்பட்டுள்ளது. இன்னுமொரு வழக்கின் விசாரணை இம்மாதம் இடம்பெறவுள்ள நிலையில் பெரும்பாலும் அந்த வழக்குக்கும் இதே தேதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் 18,19 அல்லது 20ம் திகதிக்குள் விசாரணையை எதிர்பார்த்து குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment