2011 உலக கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் ஆட்டய நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்த தகவலின் பின்னணியில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இன்றைய தினம் சுமார் 9 மணி நேரம் இது குறித்த விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார் முன்னாள் இலங்கை தேசிய அணியின் தலைவர் குமார சங்கக்கார. இந்நிலையில், நாளைய தினம் பிரதித் தலைவராக இருந்த மஹேல ஜயவர்தனவுக்கும் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹோமாகமயில் புதிய மைதானம் ஒன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை கேள்விக்குட்படுத்திய நாளிலிருந்து இரசிகர்களின் மதிப்பை வென்ற சங்கக்கார - மஹேல தொடர் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment