கொரோனா பின்னணியில் இலங்கைக்கு இதுவரை சுமார் 7000 கோடி ரூபா வெளிநாட்டு நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
முன்னதாக இலங்கைக்கு எதுவித வெளிநாட்டு நிதியுதவிகளும் கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் மே மாதம் 22 ம் திகதியளவில் அமெரிக்காவின் 75 மில்லியன் உட்பட அப்போதே 173.6 மில்லியன் கிடைக்கப் பெற்றிருந்ததாகவும் தற்போது மொத்தமாக 252 மில்லியன் டொலர் கடன் மற்றும் நிவாரண உதவிகளாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பிரதமர் விளக்கியுள்ளார்.
இவ்விபரத்தினை அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment