கொரோனா பரவலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் நேற்று புதன் கிழமை மாத்திரம் 52,982 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 2.7 மில்லியனுக்கு அதிகமானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 130,798 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுவரை தன்னால் மாஸ்க் அணிய முடியாது என தெரிவித்து வந்த அந்நாட்டின் ஜனாதிபதி ட்ரம்ப் தான் மாஸ்க் அணிவதை விரும்புவதாக தற்போது தெரிவித்துள்ளார்.
1.1 மில்லியன் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள அதேவேளை தற்சமயம் கொரோனா பாதிப்புற்றவர்களுக்கு வழங்கப்படும் remdesivir என அறியப்படும் மருந்து வகையின் அடுத்த மூன்று மாதங்களுக்கான உள்நாட்டு தயாரிப்பை அரசாங்கமே கொள்வனவு செய்து விட்டதாகவும் குறித்த மருந்தை தயாரிக்கும் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment