எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள 2020ம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையிலுமே வாக்களிப்பு இடம்பெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மேலதிக நேரம் வழங்கப்படுகின்றமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வழமை போலன்றி, ஓகஸ்ட் மாதம் 6 ம் திகதி மாலை 4 மணி முதலே தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment