கந்தகாடு பு.வாழ்வு மையத்தில் இதுவரை 252 தொற்றாளர்கள் - sonakar.com

Post Top Ad

Friday, 10 July 2020

கந்தகாடு பு.வாழ்வு மையத்தில் இதுவரை 252 தொற்றாளர்கள்

https://www.photojoiner.net/image/WmCx9vRF

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இதுவரை 252 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 56 பேர் கண்டறியப்பட்டிருந்த நிலையில் மேலும் 196 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.

இங்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டதன் பின்னணியிலேயே கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் வெலிசர கடற்படை முகாமிலும் இவ்வாறே பரிசோதனைகளின் பின்னரே நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

எனினும், சமூக மட்டத்தில் அவ்வாறான பரிசோதனைகள் எதுவும் நடாத்தப்படாத நிலையில் இலங்கையில் கொரோனா அபாயம் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment