கந்தகாடு புனர்வாழ்வு மையத்துக்கு வெளியில், அதுவும் அங்கு பணியாற்றியோரின் குடும்ப உறுப்பினர்கள் 25 பேருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க.
இதுவரை குறித்த நிலையத்திலிருந்து 532 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள போதிலும் இவ்வாறு 25 பேரே சமூக மட்டத்திலிருந்து பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதன் பின்னணியில் ஊரடங்கு அவசியமில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தற்சமயம் இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2665 என்பதோடு இதுவரை 2001 பேர் குணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment