இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2464 ஆக உயர்ந்துள்ளது. இப்பின்னணியில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 473 ஆகியுள்ளது.
இதுவரை 1980 பேர் குணமடைந்துள்ள போதிலும் தற்போது மீண்டும் சமூக மட்டத்தில் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டு வருகிறது.
தற்சமயம் கந்தகாடு புனர்வாழ்வு மையம் மற்றும் அங்கு பணியாற்றியோருக்கே தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது வெலிசர கடற்படை முகாம் போன்ற சூழ்நிலையெனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தொடர்ந்தும் வெளிநாடுகளிலிருந்து வந்தோருக்கும் தொற்றிருப்பது கண்டறியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment