இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கந்தகாடு புனார்வாழ்வு மையத்தில் பெருந்தொகையானோர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இப்பின்னணியில் தற்போதைய மொத்த எண்ணிக்கை 2454 ஆக உயர்ந்துள்ள அதேவேளை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 463 ஆகியுள்ளது.
இதுவரையில் 1980 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, தற்சமயம் மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும், வெலிசர கடற்படை முகாம் போன்று இதுவும் முகாமோடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment