இலங்கையில் ஓகஸ்ட் 1ம் திகதி ஹஜ் பெருநாள் - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 July 2020

இலங்கையில் ஓகஸ்ட் 1ம் திகதி ஹஜ் பெருநாள்


புனித துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 21ஆம் திகதி இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், உலமா சபையின் பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மேமன் சங்க, ஹனபி பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் சபை உறுப்பினர்கள் வளிமண்டல திணைக்கள அதிகாரி எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டில் எப்பாகங்களிலும் துல்-ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை தென்படாத காரணத்தினால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் துல்கஹ்தா மாதத்தை நாளை புதன் கிழமை 30ஆக பூர்த்தி செய்து துல்-ஹஜ் மாதத்திற்கான முதல் நாள் 22ஆம் திகதி புதன் கிழமை மாலை வியாழாக்கிழமை இரவு முதல் துல்கஹ்தா மாத முதலாம் நாள் ஆரம்பமாகின்றது.

இந்த வகையில் எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறபா தினமாக அமைவதுடன் புனித ஹஜ்ஜூப் பெருநாளை ஆகஸ்ட 01ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை வாழ் மக்களை கொண்டாடுமாறு பிறைக் குழு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

இம்முறை பிறை பார்க்கும் ஏற்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு உள்ளிட்ட சகல மாவட்டங்களிலும் திணைக்கள அலுவலர்களை அனுப்பி அப்பபகுதியில் உள்ள அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் இணைந்து சரியான முறையில் பிறை தென்படும் விடயங்களை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு உடன் தகவல்களை வழங்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment