கட்டுகஸ்தொட்ட, நவயாலதென்ன பகுதியில் மகாவலி ஆற்றில் பாய்ந்து 16 மற்றும் 15 வயது சிறுவன் - சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்களான இருவரும் நேற்று முதல் காணாமல் போயிருந்ததாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை இவ்விருவரும் குறித்த பகுதியின் இரயில் பாலமருகே காணப்படுவதாக தகவல் கிடைத்து பெற்றோர் அங்கு விரைந்துள்ளனர்.
எனினும், பெற்றோரின் அழைப்பை நிராகரித்து இருவரும் ஆற்றில் பாய்ந்துள்ளதுடன் ஊர் மக்கள் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தலவின்னயைச் சேர்ந்த 16 வயது சிறுவனும், நலயாலதென்னயைச் சேர்ந்த 15 வயது சிறுமியுமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment