எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன 150 ஆசனங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.
ஐக்கிய தேசியக் கட்சியும் சமகி ஜன பலவேகயவும் படு தோல்வியைச் சந்திப்பது உறுதியெனவும் அவர் சவால் விடுத்துள்ளார். நேற்றைய தினம் நாவலபிட்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே இவ்வாறு தெரிவித்த அவர், ஜனாதிபதியும் - பிரதமரும் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கட்சி பேதமின்றி வாக்களிக்க வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே போராடி கட்சியைக் காப்பாற்றியிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment