கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள ராஜாங்கன பகுதியில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஓகஸ்ட் 10ம் திகதி வரை பாடசாலை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது கல்வியமைச்சு.
இதேவேளை, ஏனைய இடங்களில் தரம் 11,12 மற்றும் 13 மாணவர்களுக்கு மாத்திரம் ஜுலை 27ம் திகதி பாடசாலை ஆரம்பமாகவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர் தர மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சின் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment