ஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றொழித்ததாக பெருமை பேசியதோடு நில்லாமல் தமிழ் தேசிய கூட்டணியினரைக் கூண்டோடு ஒழிப்பதற்கு பிரபாகரன் கட்டளையிட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ள கருணா அம்மானை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் அவரிடம் 10 லட்ச ரூபா நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரி வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளது.
கடுவெல நகரசபையின் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் கலஹபத்திரனவே இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
எனினும், கருணா அம்மானின் பேச்சால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏலவே பிரகடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment