பள்ளிவாசல்களின் கொள்ளளவுக்கேற்ப சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கமைவாக 1 மீற்றர் இடைவெளியைப் பேணி கூட்டுத் தொழுகைகளை நடாத்தலாம் என தெரிவிக்கிறது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
இதன் பின்னணியில் பள்ளிவாசல்களில் காணப்படும் இட வசதிக்கேற்ப 1 மீற்றர் இடைவெளியுடன் எத்தனை பேரை உள்ளடக்க முடியுமோ அத்தனை பேருக்கு ஜமாத் தொழுகையில் இணைந்து கொள்ள முடியும் என திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் விளக்கமளித்துள்ளார்.
இதற்கு முன்னிருந்த எண்ணிக்கை கட்டுப்பாடு இத்தால் தளர்த்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment