முஸ்லிம் காங்கிரசின் இனவாதமே UNPயின் தோல்விக்கு காரணம்: தயா கமகே - sonakar.com

Post Top Ad

Thursday, 11 June 2020

முஸ்லிம் காங்கிரசின் இனவாதமே UNPயின் தோல்விக்கு காரணம்: தயா கமகே

https://www.photojoiner.net/image/vTxvk9IA

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இனவாத கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்தமையே ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கு காரணம் என்கிறார் முன்னாள் அமைச்சர் தயா கமகே.

முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கான அரசியல் கட்சியெனக் கூறி, முஸ்லிம் சமூகத்தின் இன உணர்வைத் தூண்டியே அக்கட்சி வாக்குகளைப் பெற்று வரும் நிலையில் அவ்வாறான ஒரு கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்தமை பௌத்த மக்களிடம் அதிருப்தியைத் தோற்றுவித்து, ஐக்கிய தேசியக் கட்சியை பௌத்தர்களுக்கு எதிரான கட்சியாகக் காண்பித்து வருவதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்த போது தேசிய ரீதியில் பெரும்பான்மையான பௌத்த சமூகத்தைச் சார்ந்த தாம் அங்கு சிறுபான்மையாக இருப்பதை உணர்ந்ததாகவும் ஆனாலும் தாம் தேசியவாதியே தவிர இனவாதியில்லையெனவும் நேற்றைய தினம் சிங்கள வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலிப்பதிவுகளை கீழ்க்காணலாம்:

No comments:

Post a Comment