UK: 40 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா மரணம் - sonakar.com

Post Top Ad

Friday, 5 June 2020

UK: 40 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனா மரணம்


ஐக்கிய இராச்சியத்தின் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கை பிரகாரம் 40,261 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப கட்டத்தில் 20,000 மரணங்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தால் அது சிறந்த நிலையாக இருக்கும் என கருத்து வெளியிடப்பட்டிருந்தது. எனினும், தற்போது எண்ணிக்கை நாற்பதாயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் சனத்தொகை அளவின் அடிப்படையில் ஒவ்வொரு ஒரு இலட்சம் பேருக்கும் 60 மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment