கொரோனா சூழ்நிலையில் பணப்புழக்கம் குறைந்துள்ளதுடன், நாணயத் தாள்கள் ஊடாகவும் வைரஸ் பரவல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேருந்து சேவைகளுக்கான முன் கூட்டிய கட்டணம் செலுத்தப்பட்ட Travel Card பயன்பாட்டை ஜுலை இறுதி முதல் அறிமுகப்படுத்தப் போவதாக தெரிவிக்கிறது போக்குவரத்து அமைச்சு.
முன் கூட்டியே பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளக்கூடிய குறித்த அட்டைகளைக் கொண்டு, அதற்கான பெறுமதிக்குரிய பயணத்தை மேற்கொள்ள முடியும். இந்நடைமுறையை இலங்கையில் அறிமுகப்படுத்தப் போவதாக கடந்த பல வருடங்களாக 'பேசப்பட்டு' வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment