சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒப்பந்தம் ஏலவே கைச்சாத்திடப்பட்டு விட்டது என்று புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா விமல் வீரவன்ச.
குறித்த ஒப்பந்தத்தைத் தமது அரசு தடுத்து விட்டதாக இதுவரை காலமும் பெரமுனவினர் தெரிவித்து வரும் நிலையில் அது ஏலவே கைச்சாத்திடப்பட்டு விட்டதாகவும் அதனைத் தடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையெனவும் தெரிவிக்கின்ற விமல், மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தாலேயே அது சாத்தியம் எனவும் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தற்போது விமல் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment