2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதியாட்டத்தினை இலங்கையணி பணத்திற்கு விற்றுவிட்டதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இது குறித்து சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கவனம் செலுத்தியுள்ளது.
எனினும், மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் பேசிய பின்னரே இது குறித்து விசாரணையொன்றை நடாத்த வேண்டுமா இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப் போவதாக ஐ.சி.சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தானந்த சொல்வது உண்மையாக இருந்தால் ஆதாரங்களுடன் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலில் முறையிட வேண்டும் என முன்னாள் கிரிக்கட் அணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment