ஆனையிறவில் ஒரே இரவில் 3000 இராணுவத்தைக் கொன்றொழித்ததாகவும் கிளிநொச்சி எண்ணிக்கையும் இருப்பதாகவும் அண்மையில் சர்ச்சைக் கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுன பங்காளி விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர்.
கொரோனா வைரசை விட அதிகமான உயிர்களைப் பறித்தவன் என்ற ரீதியில் தான் கொரோனாவை விட கொடியவன் என பகிரங்கமாக பிரகடனம் செய்துள்ள கருணா அம்மானை விசாரிக்குமாறு சிங்கள பேரினவாத அமைப்புகளும் 'மென்மையான' கோரிக்கை விடுத்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் இதனை பலமான பேசுபொருளாக மாற்றியுள்ள நிலையில் ஜனாதிபதி - பிரதமருடன் நெருங்கிய தொடர்புள்ள கருணா அம்மானுக்கு எதிராக 'விசாரணை' இடம்பெறப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment