அமெரிக்க தூதரக அதிகாரி தனிமைப்படுத்தலில் 'இருப்பாராம்' - sonakar.com

Post Top Ad

Thursday, 4 June 2020

அமெரிக்க தூதரக அதிகாரி தனிமைப்படுத்தலில் 'இருப்பாராம்'


விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு முகங்கொடுக்காது அத்துமீறி நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்க தூதரக அதிகாரி, தூதரக நடைமுறைகளின் பிரகாரம் தனிமைப்படுத்தலில் இருப்பார் என விளக்கமளித்துள்ளது அரச தரப்பு.

அமெரிக்க தூதரகம் இது தொடர்பில் அவ்வப் போது தகவல் வழங்கும் எனவும் தூதரக அதிகாரி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்த போதிலும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு இணங்க மறுத்த அதிகாரி இராஜதந்திர தகைமையைக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment