கட்டுநாயக்க விமான நிலையத்தை எதிர்பார்த்தபடி ஓகஸ்ட் 1ம் திகதி திறக்க முடியாதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவதற்கு பதிந்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அனைவரையும் அழைத்து வந்த பின்னரே விமான நிலையத்தைத் திறக்க முடியும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
40,000 த்துக்கு மேற்பட்டோர் இவ்வாறு பதிந்துள்ள போதிலும் இதுவரை 10,000 பேரளவிலேயே அழைத்து வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விமான நிலைய திறப்பு மேலும் இரு வாரங்கள் தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment