கடந்த வருடம் மாகந்துரே மதுஷ் விவகாரத்தில் வெகுவாக பேசப்பட்டு நாடு திரும்பிய நிலையில் கைதான கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது இன்று மாளிகாவத்தை பகுதியில் வைத்து கத்திக் குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியில் வந்த மூவரே இவ்வாறு கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை அதில் ஒருவரையும் முச்சக்கர வண்டியையும் கைது செய்துள்ளதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
காயப்பட்ட நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment