இன்றைய தினம் டுபாயிலிருந்து இலங்கை வந்தடைந்த விமானத்தில் சுமார் 290 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை அதில் நூறு கர்ப்பிணிப் பெண்கள் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு குழந்தைகளும் இதில் உள்ளடங்குகின்ற அதேவேளை அங்கு தொழில் வாய்ப்பு நிமித்தம் சென்று முடங்கியிருந்தோரே அழைத்துவரப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரக்கணக்கானோர் நாடு திரும்ப எதிர்பார்த்திருப்பதாக சுகாதார பணிப்பாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
விமான நிலைய பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவுற்று முடிவுகள் வரும் வரை அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment