19ம் திருத்தச் சட்டத்தினை அமுலுக்கு கொண்டு வந்ததன் ஊடாக நாட்டு மக்களுக்கு மீண்டும் கிடைத்த சுதந்திரத்தை சர்வாதிகாரிகளிடம் பறி கொடுத்து விட வேண்டாம் என தெரிவிக்கிறார் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
இன்று முன்னாள் ஜனாதிபதியைக் கூட நிகழ்விலிருந்து வெளியேற்றும் அளவுக்கு சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவால் முடிகிறது. பொலிசார் அரசியல் பழிவாங்கலின்றி தமது பதவியுயர்வுகளைப் பெறுகிறார்கள். இவ்வாறான சுதந்திர சூழ்நிலையை மீண்டும் இழக்கக் கூடாது.
பெரமுனவிடம் நாட்டைக் கையளித்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவ்வாறிருக்க, கிடைத்த சுதந்திரத்தை மீண்டும் இழக்க வேண்டாம் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment