புதிய சிறைச்சாலைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்டிருந்த துஷார உபுல்தெனிய இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 3ம் திகதி இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட உபுல்தெனிய இதற்கு முன்னர் சிறைச்சாலை வழங்கல்களுக்குப் பொறுப்பான ஆணையாளராக பதவி வகித்திருந்தார்.
அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள், போதைப் பொருள் கடத்தல்கள் சிறைச்சாலையிலிருந்தே வழிநடாத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment