தலங்கம பகுதி உணவகம் ஒன்றில் உணவருந்திக் கொண்டிந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சன்ஷைன் சுத்தா என அறியப்படும் அமில பிரசாத் எனும் இயற்பெயர் கொண்ட பாதாள உலக பேர்வழி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடந்த மாத இறுதியில் துப்பாக்கிச் சூடு நடாத்தியிருந்தனர்.
இச்சம்பவத்தின் விசாரணையின் போதே தலங்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment