மொனராகல பகுதியில் அண்மையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் இன்று பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெனகல்ல, இத்தேகட்டுவ பகுதியைச் சேர்ந்த முதியான்சலாகே சமிந்த குமார எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் கடந்த மே 31ம் திகதி இந்நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிசார் கைது செய்ய முயன்ற வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment