இம்மாதம் 29ம் திகதியோடு அனைத்து பாடசாலைகளுக்குமான விடுமுறை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு கட்டங்களாக பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கிறது கல்வியமைச்சு.
இதனடிப்படையில், தரம் 5, 11 மற்றும் 13ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜுலை 6ம் திகதியும், தரம் 10 மற்றும் 12ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜீலை 20ம் திகதியும், ஏனைய வகுப்புகளுக்கு ஜுலை 27ம் திகதியும் பாடசாலை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜுன் 30 முதல் ஜுலை 3ம் திகதி வரையான காலப்பகுதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை செல்வதோடு பாடசாலை கட்டிடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment