மது போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்கான விசேட இரவு நேர நடவடிக்கையை மறு அறிவித்தல் வரை மேற்கொள்ளப் போவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் அது மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு மது போதையில் வாகனம் செலுத்துவதே காரணம் என்பதால் இவ்விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment