ஜனாதிபதியின் பரிந்துரைக் கடிதம் ஒன்றைக் கையளித்து தான் பணியாற்றிய அரச வங்கியொன்றில் நன்மையடைய முயன்ற ஊழியர் ஒருவருக்கு ஜுன் 8ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 28ம் திகதி முகாமையாளரிடம் இக்கடிதத்தை ஒப்படைத்துக் காத்திருந்த நபர் நேற்று குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தான் கணிணியைக் கொண்டு போலியாக இக்கடிதத்தைத் தயாரித்ததாக அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment