2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதியாட்டத்தின் போது முறை கேடு நிகழ்ந்துள்ளதாக அண்மையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்த குற்றச்சாட்டின் பின்னணியில் அரவிந்த டி சில்வா நாளை பிற்பகல் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மஹிந்தானந்த சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அவற்றை சர்வதேச கிரிக்கட் கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும் என முன்னர் அரவிந்த தெரிவித்திருந்தார்.
ஆட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கும் ஊழலுக்கும் தொடர்பில்லையென மஹிந்தானந்த தெரிவித்துள்ள நிலையில் தெரிவாளராகக் கடமையாற்றிய அரவிந்த விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment