ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று! - sonakar.com

Post Top Ad

Saturday, 13 June 2020

ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று!


கடந்த வியாழன் முதல் உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தான் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணி தலைவரும் சர்வதேச நட்சத்திரமுமான ஷஹித் அப்ரிடி.

தான் விரைவாகக் குணமடைய பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் இதுவரை 132,000 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 50,000 பேர் குணமடைந்துள்ளதுடன் 2551 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment