ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலையின் பின்னணியில் அமெரிக்காவில் பொலிஸ் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், 75 வயது நபர் ஒருவரை வியாழன் மாலை வேளையில் பொலிசார் தள்ளி வீழ்த்தும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது.
கீழே வீழ்ந்த மனிதரின் தலைப்பகுதியிலிருந்து இரத்தம் வடிந்த நிலையில் அசைவின்றி கிடக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை உருவாக்கியுள்ளது. இப்பின்னணியில் நியுயோர்க் பொலிசார் இருவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள பொலிசாரின் அடாவடியினால் சாதாரண மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment