எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் விநியோகம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 753,037 பேர் பதிவு செய்திருந்த அதேவேளை, முறையாக படிவத்தினை பூர்த்தி செய்யாத காரணத்தினால் 47,952 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜுலை 14,15,16 மற்றும் 17ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ள அதேவேளை குறித்த தினங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியாமல் போவோருக்கு 20 மற்றும் 21ம் திகதி வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment