இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் நபர்களை மட்டக்களப்பு பகுதியில் தனியான சிறையொன்றுக்கு மாற்றப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா.
தொழுநோயாளர்களை வைத்துப் பராமரிப்பதற்கென ஒதுக்கப்பட்டிருந்த பிரத்யேக தீவுப் பகுதிக்கே மாற்றுவதற்கு ஆலோசிக்கப்படுவதாகவும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தோரில் இருவர் மாத்திரமே எஞ்சியிருப்பதாகவும் அவர்களும் விரைவில் குணமடைந்து வெளியேறவுள்ளதால் மரண தண்டனைக் கைதிகளை அங்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கான நடைமுறை நீண்டது எனவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment