ஓகஸ்ட் மாதம் 5ம் திகதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் மூல வாக்கெடுப்புக்கான தேதி பெரும்பாலும் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய தினம் தேர்தல் ஆணைக்குழு விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்த தீர்மானம் உட்பட மேலும் சில தேர்தல் விவகாரங்கள் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் தேர்தல் ஒத்திகைகள் இடம்பெற்றுள்ள நிலையில் தேர்தலை நடாத்துவதில் ஆணைக்குழு திடமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment