சொந்த மக்களுக்கு எதிராக இராணுவம்: டிரம்ப் மிரட்டல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 June 2020

சொந்த மக்களுக்கு எதிராக இராணுவம்: டிரம்ப் மிரட்டல்


அமெரிக்காவில் கருப்பின மக்களின் உயிர்களை துச்சமாக மதித்து கண்டபடி கொலை செய்து வரும் பொலிஸ் கலாச்சாரத்துக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்து ஏழாவது நாளாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல இடங்களில் அவை வன்முறையாகவும் மாறியுள்ளதோடு வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்டு வரும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கு எதிராகவே தமது இராணுவத்தை அனுப்பப் போவதாக எச்சரித்துள்ளார் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

ஜோர்ஜ் ப்ளொயிட் எனும் கருப்பின மனிதரை கெஞ்சக் கெஞ்சக் காலால் மிதித்துக் கொலை செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியிருந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளதுடன் உலகளவில் ஆதரவும் வெளியிடப்பட்டு வருகிறது. எனினும், அமெரிக்க வெள்ளையின ஆதிக்கவாதிகள் எதிர்ப் போராட்டங்களை நடாத்தி வன்முறையைத் தூண்டவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment