2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதியாட்டம் பணத்துக்கு விற்கப்பட்டு விட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தகவல் வெளியிட்டிருந்ததன் பின்னணியில் இது குறித்து பல்வேறு மட்டத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில், பொலிசார் இன்று மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் இது குறித்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
மஹிந்தானந்தவிடம் நேரடியாக பேசிய பின்னர், விசாரணைக்கு எதுவும் இருந்தால் தகுந்த முறையில் விசாரணை இடம்பெறும் என சர்வதேச கிரிக்கட் கவுன்சில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment