எதிர்வரும் திங்கள் 08ம் திகதியே பொதுத் தேர்தலுக்கான தேதி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
இன்றைய தினம் இதற்கான அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்றின் பின்னர் தேர்தல் தேதி நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா பரவும் அபாயம் 2021 டிசம்பரானாலும் தொடரலாம் என கருத்து வெளியிட்டுள்ள தேசப்பிரிய, தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை பாதுகாப்பாக நடாத்துவதற்கான சுகாதார அமைச்சின் வழி காட்டல்களையும் இன்று பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment